ஆசிரியர் தின கவிதை
உலகின் மிக உயரிய விருது
வகுப்பறை என்ன வெறும் செங்கல் கட்டிடமா ?
தேடி பல வகுப்புகள் சென்று
பாடம் பல சொல்லிக் கொடுத்து
சிலரை கொட்டிக் கொடுத்தும்
பலரை தட்டிக் கொடுத்தும்
உயர்வுக்கு வழிகாட்டும் வள்ளல் பணி
அன்பான அறப்பணி
ஆசான் எனும் அற்புதபணி
பிள்ளைகள் வீட்டில் பிறந்தாலும்
வகுப்பறையில் தானே வளர்கிறார்கள்
சிந்தனையில் சிகரமாய் !
கடமையில் கண்ணியமாய் !
தலை இடை கடை என முப்படை மாணவர்களை இயக்கத் தெரிந்த வித்தகர்
மதிப்பெண்ணை மட்டும் நோக்கி ஓடும் ஒரு கூட்டத்தை உருவாக்கிடாமால்!
சிந்தித்து செயல்படும் புதிய சமுதாயத்தை உருவாக்கும் சிற்பி நீயல்லவா !
மாணவருக்கு, நீதான் உலகத்தின் மிக உயரிய விருது !
உண்மையாய் நற்பணி ஆற்றுவோம் !
நம் பிள்ளைகள் பார் போற்றிட மாற்றுவோம் !
என்றும் அன்புடன்
புதுமை விரும்பி ஆசிரியர்
இரா.கோபிநாதன்.
No comments:
Post a Comment