இவ்விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் தலைமை ஆசிரியர் திருமதி.கி.ஷண்முகவடிவு
(அரசு மேல்நிலைப் பள்ளி வேங்காம்பட்டி) அவர்கள் வரவேற்றார்.
இந்நிகழ்வில் கரூர் மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர்
திரு.ஜெரால்டு ஆரோக்கியராஜ் அவர்கள் சூழலியலும் சகவாழ்வும் எனும் தலைப்பில்
கருத்துரைகளை வழங்கினார்.
கரூர் பொன்வித்யா மந்திர் பள்ளியின் இயக்குநர் திரு.சன்னி
நக்பால் அவர்கள் கோட்பாடுகளில் இருந்து செயல்பாடுகளுக்கு எனும் தலைப்பில் குழு
விவாதம் நிகழ்த்தினார்.
சூழலியல் ஆர்வலர் திரு.சதானந்தம் (மருத்துவர் ராமநாதன்
சூழலியல் மன்றம்) அவர்கள் கோவிட் கொல்லி மூலிகைகள் குறித்து சிறப்புரை ஆற்றினார்.
உடல் நலமே உயிர் நலம் எனும் தலைப்பில் திரு.கோவிந்தராசு உடற்கல்வி இயக்குனர் ஓய்வு
அரசு கலைக் கல்லூரி நாமக்கல் அவர்கள் சிறப்புரை வழங்கினார்.
புனவாசிப்பட்டி
ஊ.ஒ.தொ.பள்ளி ஆசிரியர் திரு.கோபிநாதன் அவர்கள் உயிர் காக்கும் 64 மூலிகைகள்
குறித்து சிறப்புரை நிகழ்த்தினார்.
கரூர் எண்ணம் Mr. Srikanth அவர்கள் தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கினார்.
பள்ளியில் பணிபுரியும் கட்டிடப்பணியாளர்களுக்கு ஆசிரியர்கள் பரிவட்டம் கட்டி சிறப்பு செய்தனர்.
பள்ளி ஆசிரியை திருமதி. ஜெ.சரண்யா,
முதுகலை ஆசிரியர் (ஆங்கிலம்)அவர்கள் நன்றி கூறினார்.
நிகழ்வு ஒருங்கிணைப்பு
திருமதி வி.வளர்மதி, பட்டதாரி ஆசிரியர் (ஆங்கிலம்) அவர்கள் செய்திருந்தார்.
விழா ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் , உதவி தலைமை ஆசிரியர் திரு.பெ.ஜெகநாதன் & ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
இந்நிகழ்வில் பள்ளி மாணவர்கள் மிகவும் ஆர்வமுடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.