Monday, December 21, 2020

SMC MEETING - வெற்றி கதை -

 🌹இந்த வெற்றி கதையினை தங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.


🌹எனது பெயர் இரா. கோபிநாதன் இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, புணவாசிப்பட்டி, கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கரூர் மாவட்டம்.



🌹இந்த வாய்ப்பை நல்கிய பள்ளி தலைமை ஆசிரியை திருமதி.விஜயகுமாரி அவர்களுக்கும் என்னுடன் பயிற்சி வழங்கிய ஆசிரிய பயிற்றுநர் திரு.ரவிக்குமார் அவர்களுக்கும் நன்றிகளை உரித்தாக்குகின்றேன்.


🌹கல்வி என்பது சமுதாயத்திற்கு ஒரு இன்றியமையாத் தேவையாகும்.


🌹அனைவருக்கும் தரமான கல்வி வழங்குவதன் மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் சிறந்து விளங்க வேண்டும் எனும் நோக்கத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி செயல்பட்டு வருகிறது.


🌹இப்பணியை திறம்பட செயல்படுத்தும் பொருட்டு பள்ளிகளை ஒருங்கிணைத்து மேலாண்மை செய்யும் பணிகளைப் பள்ளி மேலாண்மை குழுக்கள் ஒவ்வொரு பள்ளியிலும் செயல்பட்டு வருகின்றது.



🌹பள்ளி மேலாண்மை குழுக்கள் சிறப்பாக செயல்பட புணவாசிப்பட்டி குறு வள மையத்திற்கு உட்பட்ட 13 பள்ளி மேலாண்மை குழுக்களுக்கு 20-02-2020 & 03-03-2020 ஆகிய இரண்டு நாட்கள் பயிற்சி வழங்கினோம்.



🌹பயிற்சியின் வாயிலாக இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் - 2009, குழந்தைகளின் உரிமைகள், தரமான கல்வி, பாலின பாகுபாடு, சமூகத் தணிக்கை, பள்ளி மேலாண்மை குழுவின் பணிகள், முழுமைத் தரநிலை மற்றும் மதிப்பீடு, தூய்மைப் பள்ளி மற்றும் நடத்தை மாற்றம், தமிழக அரசின் நலத்திட்டங்கள் ஆகியன குறித்த முக்கியமான தகவல்களை பல்வேறு செயல்பாடுகள் , கலந்துரையாடல்கள், விளையாட்டு முறைகள் என பல்வேறு வகைகளில் பயிற்சி அளித்தோம்.


🌹இந்த பயிற்சியின் விளைவாக அவர்களின் பள்ளிகளில் பல்வேறு 

முன்னேற்றங்களையும் மாற்றங்களையும் காணமுடிந்தது  குறிப்பாக பல பள்ளிகளில் கல்விச்சீர் வழங்கும் நிகழ்வுகள் நடைபெற்றன.


🌹குழு உறுப்பினர்கள் அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதிலும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதிலும் முனைப்பு காட்டினர்.


🌹பள்ளிகளின் தூய்மையை பேணுதல் , மாணவர்களை பள்ளிக்கு தூய்மையாகவும் குறித்த நேரத்திலும் அனுப்புவதை காண முடிந்தது.


மேலும் பள்ளியின்பால் சமூக அக்கறையுடன் செயல்படுவதை காண முடிகிறது.


இந்த பயிற்சியில் நான் ஒரு கருத்தாளராக கலந்து கொண்டதாலும் பயிற்சி பெற்றதாலும் எமது பள்ளி மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பல்வேறு விழிப்புணர்வு களை ஏற்படுத்தினேன்.


குறிப்பாக பாலின பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வு மற்றும் பாலின குற்றம் செய்வோரை தண்டிக்கும் 'போக்சோ' சட்டம் சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்தினேன்.


 🌹பேரிடர் காலங்களில் மேற்கொள்ள

 வேண்டிய வழிமுறைகள்,

மாணவர்களின் தன் சுத்தம் மற்றும் சுகாதாரம் குறித்த கலந்துரையாடல் செய்தேன்.



🌹எங்கள் பள்ளியில் கழிவுநீரினை மேலாண்மை செய்ய சிறு தோட்டம் அமைத்து பராமரிக்க செய்தோம்.


🌹அதற்காக பள்ளி சுகாதார அமைச்சர் , சத்துணவு அமைச்சர், நீர் வளத்துறை அமைச்சர் என பல்வேறு அமைச்சர்களை தேர்ந்தெடுத்து அவர்களின் மேற்பார்வையில் சுகாதாரத்தை காக்க செய்கிறோம்.


பெற்றொர்களையும் சமூக ஆர்வலர்களையும் ஒருங்கிணைக்க தனி வாட்சப் குழு உருவாக்கி பள்ளி செயல்பாடுகளை அவர்களுக்கு தெரியப்படுத்தியும் பள்ளிக்கு அவர்களின் பங்களிப்பை முழுமையாக செயல்படுத்திட செய்து வருகின்றோம்.


🌹பள்ளி மேலாண்மை குழு பயிற்சி அனைத்து பள்ளிகளிலும் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.